அல்-முக்தஸர்
نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰٓ إِذْ يَقُولُ ٱلظَّـٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا ﴿٤٧﴾
அவர்களது தலைவர்கள் எவ்வாறு குர்ஆனை காதுகொடுத்துக் கேட்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் இதன் மூலம் நேர்வழியில் செல்வதை விரும்பவில்லை. மாறாக அவர்கள் நீர் குர்ஆன் ஓதும் போது பரிகாசத்திலும் வீணானவற்றிலும் ஈடுபடவே முனைகின்றனர். -“மக்களே!- நீங்கள் சூனியம் செய்யப்பட்ட, அறிவு குழம்பிய ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்று நிராகரிப்பினால் தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்டவர்கள் கூறி ஒருவருக்கொருவர் இரகசியமாக பேசி அல்குர்ஆனைப் பொய்ப்பிப்பதிலும் அதனை விட்டும் தடுப்பதிலும் ஈடுபடுவதை நாம் நன்கறிந்துள்ளோம்.