அல்-முக்தஸர்
وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى ٱلْقُرْءَانِ وَحْدَهُۥ وَلَّوْا۟ عَلَىٰٓ أَدْبَـٰرِهِمْ نُفُورًا ﴿٤٦﴾
குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் நாம் திரைகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளிலும் ஒரு அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் அதிலிருந்து பயனடையும் வகையில் செவியுற முடியாது. நீர் குர்ஆனில் அவர்களால் தெய்வமாகக் கருதப்படுபவற்றை குறிப்பிடாமல் அல்லாஹ் ஒருவனை மட்டுமே குறிப்பிட்டால் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஏகத்துவத்தை வழங்க மறுத்து ஒதுங்கித் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.