×

النحل

வசனம் 92

அல்-முக்தஸர்

وَلَا تَكُونُوا۟ كَٱلَّتِى نَقَضَتْ غَزْلَهَا مِنۢ بَعْدِ قُوَّةٍ أَنكَـٰثًا تَتَّخِذُونَ أَيْمَـٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِىَ أَرْبَىٰ مِنْ أُمَّةٍ ۚ إِنَّمَا يَبْلُوكُمُ ٱللَّهُ بِهِۦ ۚ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ مَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ ﴿٩٢﴾

ஒப்பந்தங்களை முறித்து மூடர்களாக, புத்தி குறைந்தவர்களாக ஆகிவிடாதீர்கள். அதற்கு உதாரணம், கஷ்டப்பட்டு நூல் நூற்று பின்னர் அதனை முன்பு இருந்தது போன்றே துண்டு துண்டாக ஆக்கிவிட்ட முட்டாள் பெண்ணைப் போன்றதாகும். அவள் நூற்பதிலும் அதனை பிரிப்பதிலும் சிரமப்பட்டு விட்டு எவ்வித பயனையும் அடையவில்லை. எதிரியின் சமூகத்தைவிட உங்களின் சமூகம் பெருகி பலமடைந்துவிட வேண்டும் என்பதற்காக உங்களின் சத்தியங்களை ஒருவரையொருவர் ஏமாற்றும் சாதனமாக ஆக்கி விடாதீர்கள். ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவதைக்கொண்டு அல்லாஹ் உங்களை சோதிக்கிறான், நீங்கள் முழுமையாக நிறைவேற்றுகிறீர்களா அல்லது முறித்து விடுகிறீர்களா என்று.” நீங்கள் உலகில் முரண்பட்டுக் கொண்டிருந்த அனைத்தையும் அவன் மறுமை நாளில் உங்களுக்குத் நிச்சயம் தெளிவுபடுத்திவிடுவான். அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார்? பொய்யர்களில் உண்மையாளர்கள் யார்? என்று அனைவரும் வெட்டவெளிச்சமாகி விடுவார்கள்.