×

النحل

வசனம் 84

அல்-முக்தஸர்

وَيَوْمَ نَبْعَثُ مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا۟ وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ ﴿٨٤﴾

தூதரே!- அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கும் அனுப்பப்பட்ட அதன் தூதரை அவர்களில் நம்பிக்கையாளனின் நம்பிக்கைக்கும் நிராகரிப்பாளனின் நிராகரிப்பிற்கும் சாட்சி கூறுவதற்காக எழுப்பும் நாளை நினைவு கூர்வீராக. அதன் பின்னர் நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பைக் குறித்து சாக்குப்போக்குகள் கூற அனுமதியளிக்கப்படாது. தங்கள் இறைவனின் திருப்தியை சம்பாதிப்பதற்காக அவர்கள் மீண்டும் உலகிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். மறுமை விசாரணை செய்யப்படுவதற்கான இடமேயன்றி அமல் செய்வதற்கான இடம் அல்ல.