×

النحل

வசனம் 83

அல்-முக்தஸர்

يَعْرِفُونَ نِعْمَتَ ٱللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكْثَرُهُمُ ٱلْكَـٰفِرُونَ ﴿٨٣﴾

இணைவைப்பாளர்கள் தங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை அறிவார்கள். அவற்றுள் நபியவர்களை அவர்களின் பக்கம் தூதராக அனுப்பியதும் ஒன்றாகும். இருந்தும் அவற்றுக்கு நன்றிசெலுத்தாததன் மூலமும் அவனது தூதரை மறுத்ததன் மூலமும் அவனது அருட்கொடைகளை மறுக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறுப்பவர்களே.