×

النحل

வசனம் 36

அல்-முக்தஸர்

وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱجْتَنِبُوا۟ ٱلطَّـٰغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى ٱللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ ٱلضَّلَـٰلَةُ ۚ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ ﴿٣٦﴾

முந்தைய ஒவ்வொரு சமூகத்திற்கும் அவன் தூதர்களை அனுப்பி அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: “நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனைத் தவிர சிலைகளையோ ஷைத்தான்களையோ இன்னபிற பொருள்களையோ வணங்கக்கூடாது.” அவர்களில் அல்லாஹ்வின் அருளைப் பெற்று அவனை நம்பிக்கை கொண்டு, தங்களின் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றியவர்களும் இருந்தனர். இன்னும் சிலர் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு அல்லாஹ்வின் அருளுக்கு உட்படாதோரும் இருந்தனர். எனவே அவர்களின் மீது வழிகேடு உறுதியாகி விட்டது. தண்டனை மற்றும் அழிவுக்குள்ளான நிராகரிப்பாளர்களின் கதி என்னவாயிற்று என்பதை உங்கள் கண்களால் பார்ப்பதற்காக பூமியில் பயணம் செய்யுங்கள்.