அல்-முக்தஸர்
وَقَالَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَا عَبَدْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍ نَّحْنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍ ۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ فَهَلْ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ ﴿٣٥﴾
தமது வணக்கத்தில் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கியவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் நாம் அவனுக்கு எதனையும் இணைவைக்காமல் அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென நாடியிருந்தால் நாங்களோ எங்கள் முன்னோர்களோ அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கியிருக்க மாட்டோம். அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் எதனையும் தடைசெய்யக்கூடாது என அவன் நாடியிருந்தால் நாம் எதையும் தடைசெய்திருக்க மாட்டோம்.” இந்தத் தவறான ஆதாரத்தையே இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பாளர்களும் கூறினார்கள். எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டதை தெளிவாக எடுத்துரைப்பதே தூதர்கள் மீதுள்ள கடமையாகும். அவர்கள் எடுத்துரைத்து விட்டார்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு விருப்பத்தையும் தேர்வு செய்யும் உரிமையையும் வழங்கி, அவர்களின்பால் தனது தூதர்களையும் அனுப்பிய பிறகு அவர்கள் விதியை தங்களுக்கு ஆதாரமாக கூறமுடியாது.