அல்-முக்தஸர்
ثُمَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تُشَـٰٓقُّونَ فِيهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ إِنَّ ٱلْخِزْىَ ٱلْيَوْمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلْكَـٰفِرِينَ ﴿٢٧﴾
பின்னர் மறுமை நாளில் அல்லாஹ் அவர்களை வேதனையால் இழிவுபடுத்துவான். அவன் அவர்களிடம் கேட்பான்: “நீங்கள் வணக்கத்தில் எனக்கு இணையாக்கிக் கொண்டிருந்த எனக்கு நிகரானவர்கள் எங்கே? அவற்றினால்தானே என் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் எதிர்த்துக் கொண்டிருந்தீர்கள்?” இறைவனுக்குக் கட்டுப்பட்ட அறிஞர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் இழிவும் வேதனையும் நிராகரிப்பாளர்களைத் தாக்கியே தீரும்.”