அல்-முக்தஸர்
قَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى ٱللَّهُ بُنْيَـٰنَهُم مِّنَ ٱلْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ ٱلسَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ ﴿٢٦﴾
இவர்களுக்கு முன்னால் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் தூதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ் அவர்களின் கட்டடங்களை அடியோடு தகர்த்து விட்டான். மேலிருந்து முகடுகள் அவர்களின் மீது விழுந்து விட்டன. அவர்கள் எதிர்பார்க்காத புறத்திலிருந்து வேதனை அவர்களிடம் வந்தது. அவர்களின் கட்டடங்கள் அவர்களைப் பாதுகாக்கும் என்றே அவர்கள் எண்ணியிருந்தார்கள். எனவே அவற்றைக் கொண்டே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.