×

إبراهيم

வசனம் 36

அல்-முக்தஸர்

رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ ٱلنَّاسِ ۖ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى ۖ وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ ﴿٣٦﴾

இறைவா! நிச்சயமாக சிலைகள் மக்களில் ஏராளமானோரை வழிகெடுத்து விட்டன. அவை அவர்களுக்காகப் பரிந்துரை செய்யும் என்று அவர்கள் எண்ணி அதனால் சோதனைக்குள்ளாகி அல்லாஹ் அல்லாத அவற்றையும் அவர்கள் வணங்கினார்கள். அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதிலும் அவனுக்குக் கட்டுப்படுவதிலும் மக்களில் என்னைப் பின்பற்றியவர் என்னைச் சார்ந்தவர்களில் ஒருவர் ஆவார். எனக்கு மாறுசெய்து, அல்லாஹ் ஒருவனையே வணங்குவதிலும், அவனுக்குக் கட்டுப்படுவதிலும் என்னைப் பின்பற்றாதவர் ஆவர், -இறைவா!- நிச்சயமாக நீ நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய்.