அல்-முக்தஸர்
وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا ٱلْبَلَدَ ءَامِنًا وَٱجْنُبْنِى وَبَنِىَّ أَن نَّعْبُدَ ٱلْأَصْنَامَ ﴿٣٥﴾
தூதரே!- இப்ராஹீம் தம் மகன் இஸ்மாயீலையும் அவரது தாய் ஹாஜரையும் மக்காவிலுள்ள பள்ளத்தாக்கில் குடியமர்த்திய போது கூறியதை நினைவுகூர்வீராக. அவர் கூறினார்: “இறைவா! என் குடும்பத்தினரைக் குடியமர்த்தும் இந்த -மக்கா- நகரத்தை பாதுகாப்பானதாக ஆக்குவாயாக. இங்கு இரத்தம் சிந்தப்படக் கூடாது. எவர் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. என்னையும் என் சந்ததியினரையும் சிலை வழிபாட்டிலிருந்து தூரமாக்குவாயாக.