அல்-முக்தஸர்
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُوا۟ نِعْمَتَ ٱللَّهِ كُفْرًا وَأَحَلُّوا۟ قَوْمَهُمْ دَارَ ٱلْبَوَارِ ﴿٢٨﴾
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த குறைஷிகளை நீர் பார்க்கவில்லையா? ஹரமில் பாதுகாப்பு அளித்து, அவர்களிடையே முஹம்மத் என்ற தூதரை ஏற்படுத்தி அல்லாஹ் அவர்கள் மீது புரிந்து அருட்கொடைகளுக்குப் பகரமாக நபியவர்கள் கொண்டு வந்தததை மறுத்து அவனது அருள்களை நிராகரித்தார்கள். தங்கள் சமூகத்தில் நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியோரை அழிவில் தள்ளவிட்டார்கள்.