×

إبراهيم

வசனம் 27

அல்-முக்தஸர்

يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ ۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّـٰلِمِينَ ۚ وَيَفْعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ ﴿٢٧﴾

நிலையான ஏகத்துவ வார்த்தையை இவ்வுலகில் பூரணமாக நம்பிக்கை கொண்ட முஃமீன்களுக்கு அவர்கள் நம்பிக்கையுடன் மரணிக்கும் பொருட்டு உறுதியை வழங்குகிறான். அதேபோன்று மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கிய அநியாயக்காரர்களை, அவனை நிராகரிப்பவர்களை அவன் நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்து விடுகிறான். அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். தன் நீதியால் தான் நாடுபவர்களை வழிதவறச் செய்கிறான். தன் அருளால் தான் நாடுபவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். அவனை நிர்ப்பந்திக்கும் எவரும் இல்லை.