×

إبراهيم

வசனம் 22

அல்-முக்தஸர்

وَقَالَ ٱلشَّيْطَـٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَـٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى ۖ فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم ۖ مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ ۖ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ ٱلظَّـٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٢٢﴾

சுவனவாசிகள் சுவனத்தில் நுழையும் போதும், நரகவாசிகள் நரகத்தில் நுழையும் போதும் இப்லீஸ் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளித்தான். தான் அளித்த வாக்குறுதியை அவன் நிறைவேற்றினான். நான் உங்களுக்குப் பொய்யான வாக்குறுதி அளித்தேன். நான் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றவில்லை. உலகில் உங்களை நிராகரிப்பின் பக்கமும், வழிகேட்டின் பக்கமும் தள்ளுவதற்கு நான் உங்கள் மீது ஆதிக்கம் பெற்றிருக்கவில்லை. ஆனால் நிராகரிப்பின் பக்கம் நான் உங்களை அழைத்தேன்; பாவங்களை உங்களுக்கு அலங்கரித்துக் காட்டினேன். நீங்கள் விரைந்து என்னைப் பின்பற்றினீர்கள். எனவே உங்களது வழிகேட்டுக்கு என்னைப் பழிக்காதீர்கள். உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். நீங்கள்தாம் பழிப்பிற்குத் தகுதியானவர்கள். உங்களின் வேதனையை அகற்றுவதற்கு நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. என்னை விட்டு வேதனையை அகற்றுவதற்கு நீங்களும் எனக்கு உதவ முடியாது. நீங்கள் வணக்கத்திலே அல்லாஹ்வுக்கு இணையாக என்னை வணங்கியதை நான் நிராகரித்து விட்டேன். -இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்திய, அவனை நிராகரித்த- அநியாயக்காரர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.