×

إبراهيم

வசனம் 21

அல்-முக்தஸர்

وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًا فَقَالَ ٱلضُّعَفَـٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍ ۚ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَـٰكُمْ ۖ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍ ﴿٢١﴾

மறுமை நாளில் படைப்புகள் அனைத்தும் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கம் வருவார்கள். தலைவர்களைப் பின்பற்றிய பலவீனர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: -தலைவர்களே- “நாங்கள் உங்களைப் பின்பற்றக்கூடியவர்களாக இருந்தோம். உங்களின் ஏவல்களை ஏற்றும் விலக்கல்களை விலகியும் நடந்தோம். உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் சிறிதளவேனும் எங்களைக் காப்பாற்ற முடியுமா?” பின்பற்றப்பட்ட தலைவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருந்தால் நாங்கள் உங்களுக்கும் நேர்வழி காட்டியிருப்போம். நாம் அனைவரும் அவனுடைய வேதனையிலிருந்து தப்பியிருப்போம். ஆனால் நாமும் வழிகெட்டு. உங்களையும் வழிகெடுத்து விட்டோம். நாம் வேதனையை சகித்துக் கொண்டாலும் அல்லது பொறுமையடைந்தாலும் இரண்டுமே நமக்கு ஒன்றுதான். நாம் வேதனையிலிருந்து தப்ப முடியாது.”