×

الرعد

வசனம் 28

அல்-முக்தஸர்

ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِ ۗ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ ﴿٢٨﴾

அல்லாஹ் நேர்வழிகாட்டிய இவர்கள்தாம் நம்பிக்கையாளர்களாவர். அவனுடைய தூய்மையை பறைசாற்றுவது, அவனைப் புகழ்வது, அவனுடைய வேதத்தை ஓதுவது, அதனைக் கேட்பது போன்ற பல்வேறு வகை திக்ருகளின் மூலம் அவர்களின் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் நினைவால் மாத்திரமே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. அதுவே அவற்றுக்குப் பொருத்தமானதாகும்.