×

يوسف

வசனம் 21

அல்-முக்தஸர்

وَقَالَ ٱلَّذِى ٱشْتَرَىٰهُ مِن مِّصْرَ لِٱمْرَأَتِهِۦٓ أَكْرِمِى مَثْوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًا ۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمْرِهِۦ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ ﴿٢١﴾

எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தம் மனைவியிடம் கூறினார்: “இவருடன் நல்ல முறையில் நடந்துகொள். நம்முடன் தங்கவைத்து இவரைக் கண்ணியப்படுத்து. இவர் நமக்குத் தேவையுள்ளவராக இருக்கலாம் அல்லது நாம் இவரை நம் மகனாக தத்தெடுத்துக் கொள்ளலாம். நாம் யூஸுஃபைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றி, கிணற்றிலிருந்து வெளியாக்கியது போல எகிப்தின் அரசனை அவர் மீது அன்பு செலுத்த வைத்து எகிப்தில் அவருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினோம். நாம் அவருக்கு கனவின் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தோம். அல்லாஹ் தன் விஷயத்தில் மேலோங்கியவனாக இருக்கின்றான். அவனுடைய கட்டளை நிறைவேறியே தீரும். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் -நிராகரிப்பாளர்கள- இதனை அறியமாட்டார்கள்.