அல்-முக்தஸர்
وَشَرَوْهُ بِثَمَنٍۭ بَخْسٍ دَرَٰهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا۟ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ ﴿٢٠﴾
தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் எகிப்தில் யூஸுஃபை அற்ப விலைக்கு விற்றுவிட்டார்கள். அவர்கள் விரைவாக அவரை விட்டு விடுபட வேண்டும் என்ற எண்ணத்தினால் அவரின் விஷயத்தில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். அவரைப் பார்த்தால் அடிமை போன்று இல்லை என்பதை புரிந்துகொண்டு, அவருடைய குடும்பத்தினர் வந்துவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். இதனால்தான் அவர் அவர்களுடன் நீண்ட காலம் தங்கியிருக்கவில்லை.