அல்-முக்தஸர்
ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۖ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوٓا۟ أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ ﴿١٠٢﴾
தூதரே!- மேற்கூறப்பட்ட யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாற்றை நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கின்றோம். அது குறித்து நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். ஏனெனில் யூஸுஃபின் சகோதரர்கள் அவரைக் கிணற்றில் போட நாடிய போதும் அவர்கள் தந்திரத்தைத் திட்டமிட்ட போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. ஆயினும் நாம் அதனை உமக்கு வஹி மூலம் அறிவித்தோம்.