அல்-முக்தஸர்
رَبِّ قَدْ ءَاتَيْتَنِى مِنَ ٱلْمُلْكِ وَعَلَّمْتَنِى مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ فَاطِرَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ ﴿١٠١﴾
பின்னர் யூஸுஃப் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நீ எனக்கு எகிப்தின் அரசாட்சியை வழங்கினாய். கனவுகளின் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தாய். வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! இவ்வுலகிலும் மறுவுலகிலும் என்னுடைய எல்லா விவகாரங்களுக்கும் நீயே பொறுப்பாளியாவாய். எனது தவணை நிறைவடைந்து என் உயிரைக் கைப்பற்றும் போது என்னை முஸ்லிமாகவே உனக்குக் கட்டுப்பட்டவனாகவே கைப்பற்றுவாயாக. ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தில் இருக்கும் எனது மூதாதையர்களிலும் ஏனையோர்களிலும் உள்ள நல்லோர்களான தூதர்களுடன் என்னைச் சேர்த்தருள்வாயாக.”