அல்-முக்தஸர்
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوطًا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَـٰذَا يَوْمٌ عَصِيبٌ ﴿٧٧﴾
வானவர்கள் லூத்திடம் மனித உருவில் வந்த போது அவர்களின் வருகை அவருக்கு கவலையூட்டியது. பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் தங்களின் காம இச்சையைத் தணித்துக் கொள்ளும் தம் சமூகத்தினர் மீது உள்ள அச்சத்தினால் அவருடைய உள்ளம் நெருக்கடிக்குள்ளாகியது. தன் சமூகம் தனது விருந்தினர் மீதும் அத்துமீறிவிடுவார்கள் என்ற எண்ணத்தால் அவர் கூறினார், “இது மிகவும் கடினமான நாளாகும்.”