×

هود

வசனம் 76

அல்-முக்தஸர்

يَـٰٓإِبْرَٰهِيمُ أَعْرِضْ عَنْ هَـٰذَآ ۖ إِنَّهُۥ قَدْ جَآءَ أَمْرُ رَبِّكَ ۖ وَإِنَّهُمْ ءَاتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍ ﴿٧٦﴾

வானவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீமே! லூத்தின் சமூகத்தைக் குறித்து விவாதிப்பதை விட்டு விடுவீராக. உம் இறைவன் அவர்கள் மீது விதித்த வேதனையை நிறைவேற்றுமாறு அவனுடைய கட்டளை வந்து விட்டது. பயங்கர வேதனை லூத்தின் சமூகத்தைத் தாக்கியே தீரும். விவாதமோ பிரார்த்தனையோ அதனைத் தடுத்துவிட முடியாது.