×

هود

வசனம் 109

அல்-முக்தஸர்

فَلَا تَكُ فِى مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هَـٰٓؤُلَآءِ ۚ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ ءَابَآؤُهُم مِّن قَبْلُ ۚ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنقُوصٍ ﴿١٠٩﴾

தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் வணங்குவது தீயது என்பதில் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சரியானது என்பதற்கு அவர்களிடம் மார்க்க ரீதியான, அறிவு பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. தங்கள் முன்னோர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவதே அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கான காரணமாகும். நாம் அவர்களுக்கு அளிக்கும் வேதனையின் பங்கை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவோம்.