அல்-முக்தஸர்
وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُوا۟ فَفِى ٱلْجَنَّةِ خَـٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَـٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ ۖ عَطَآءً غَيْرَ مَجْذُوذٍ ﴿١٠٨﴾
நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து அல்லாஹ்வின் அருளைப் பெற்ற பாக்கியசாலிகள் வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை சுவனத்தில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். சுவனம் நுழைய முன் விசுவாசிகளிலுள்ள பாவிகளில் நரகம் நுழைய வேண்டும் என அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. நிச்சயமாக சுவனவாசிகளுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் முடிவே இல்லாதது.