×

يونس

வசனம் 75

அல்-முக்தஸர்

ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ وَهَـٰرُونَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ بِـَٔايَـٰتِنَا فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا مُّجْرِمِينَ ﴿٧٥﴾

இந்த தூதர்கள் அனுப்பப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் எகிப்தின் அரசன் பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து தலைவர்களிடமும் அனுப்பினோம். அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பினோம். ஆனால் பிர்அவ்னும் அவன் சமூகத்தினரும் அவர்கள் இருவரும் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்ளாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை மறுத்ததனாலும் குற்றவாளிகளாக இருந்தார்கள்.