×

يونس

வசனம் 74

அல்-முக்தஸர்

ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَـٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ بِهِۦ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلْمُعْتَدِينَ ﴿٧٤﴾

நூஹுக்கு சில காலத்திற்குப் பிறகு பல தூதர்களை அவர்களது சமூகங்களின்பால் அனுப்பினோம். தூதர்கள் தங்களின் சமூகங்களிடம் சான்றுகளையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் தூதர்களை நிராகரிப்பதில் முன்பு உறுதியாக இருந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். முந்தைய தூதர்களை நிராகரித்த அந்த மக்கள் மீது முத்திரையிட்டது போன்றே எல்லா கால கட்டங்களிலும் இடங்களிலும் நிராகரிப்பின் மூலம் இறைவரம்பை மீறக்கூடிய நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களின் மீதும் முத்திரையிட்டு விடுகின்றோம்.