×

يونس

வசனம் 35

அல்-முக்தஸர்

قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ ۚ قُلِ ٱللَّهُ يَهْدِى لِلْحَقِّ ۗ أَفَمَن يَهْدِىٓ إِلَى ٱلْحَقِّ أَحَقُّ أَن يُتَّبَعَ أَمَّن لَّا يَهِدِّىٓ إِلَّآ أَن يُهْدَىٰ ۖ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ﴿٣٥﴾

தூதரே!- அவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்கள் இணைத்தெய்வங்களில் யாராவது உங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவார்களா? நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வே சத்தியத்தின்பால் வழிகாட்டுகிறான். மனிதர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுபவன், அதன்பால் அவர்களை அழைப்பவன் பின்பற்றத்தகுதியானவனா? அல்லது மற்றவர்கள் வழிகாட்டா விட்டால் நேர்வழியடைய இயலாத உங்கள் தெய்வங்களா? உங்களுக்கு என்னவாயிற்று? அவை அல்லாஹ்வுக்கு இணையானவை என்பதாக எவ்வாறு தவறாக தீர்ப்பளிக்கிறீர்கள்? உங்களது கூற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்து விட்டான்.