அல்-முக்தஸர்
قُلْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ ۚ قُلِ ٱللَّهُ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ ﴿٣٤﴾
தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் உங்களின் இணைத் தெய்வங்களில் யாராவது முன்மாதிரியின்றி படைப்பைப் படைத்து பின்னர் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவார்களா?” நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே முன்மாதிரியின்றி ஆரம்பத்தில் படைத்தான். பின்னர் அவனே அவை இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். -இணைவைப்பாளர்களே!- சத்தியத்தை விட்டு விட்டு அசத்தியத்தின் பக்கம் எவ்வாறு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்?”