×

يونس

வசனம் 16

அல்-முக்தஸர்

قُل لَّوْ شَآءَ ٱللَّهُ مَا تَلَوْتُهُۥ عَلَيْكُمْ وَلَآ أَدْرَىٰكُم بِهِۦ ۖ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِۦٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ ﴿١٦﴾

தூதரே!- நீர் கூறுவீராக: “நான் உங்களுக்குக் குர்ஆனை எடுத்துரைக்கக் கூடாது என்று அல்லாஹ் நாடியிருந்தால் நான் உங்களுக்கு அதனை உங்களிடம் ஓதியிருக்கவும் மாட்டேன். அதனை உங்களுக்கு எடுத்துரைத்திருக்கவும் மாட்டேன். அவன் நாடியிருந்தால் என் மூலமாக குர்ஆனை உங்களுக்குக் கற்றுத் தந்திருக்க மாட்டான். நான் உங்களிடையே நீண்ட காலம் - நாற்பது வருடம் - தங்கியுள்ளேன். எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நாம் இப்பொழுது பெற்றிருக்கும் இந்த பணியையும் நான் தேடவில்லை. நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான், எனக்கு அதில் எந்த தலையீடும் இல்லை என்பதை உங்களின் அறிவைக் கொண்டு அறிந்துகொள்ள மாட்டீர்களா?