×

يونس

வசனம் 15

அல்-முக்தஸர்

وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَاتُنَا بَيِّنَـٰتٍ ۙ قَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا ٱئْتِ بِقُرْءَانٍ غَيْرِ هَـٰذَآ أَوْ بَدِّلْهُ ۚ قُلْ مَا يَكُونُ لِىٓ أَنْ أُبَدِّلَهُۥ مِن تِلْقَآئِ نَفْسِىٓ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۖ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ﴿١٥﴾

அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய குர்ஆனின் தெளிவான வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நற்கூலியை விரும்பாத, தண்டனையை அஞ்சாத மறுமையை மறுப்பவர்கள், -“முஹம்மதே!- சிலை வணக்கத்தைக் குறைகூறும் இந்தக் குர்ஆன் அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டுவாரும். அல்லது எங்களின் மனவிருப்பங்களுக்கு உடன்படும் விதத்தில் இதில் சிலதை அல்லது முழுதையும் மாற்றிவிடுவீராக” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என்னால் மாற்றவே முடியாது -என்றிருக்கும் பொழுது- வேறொன்றை என்னால் கொண்டு வருவதும் சாத்தியமற்றதாகும். மாறாக அல்லாஹ்வே தான் நாடியதை மாற்றுகிறான். எனக்கு அல்லாஹ் அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களின் கோரிக்கையை ஏற்று அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் மிகப் பெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.”