உமர் ஷரீஃப் — 61
3:84 (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (இன்னும் அவர்களுடைய) சந்ததிகள் மீது இறக்கப்பட்டதையும்; மூஸா, ஈஸா இன்னும் (அனைத்து) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். இவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவரை நபியல்ல என்று) பிரிக்கமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆவோம்.
3:85 இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)தை மார்க்கமாக எவர் (பின்பற்ற) விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.
3:86 அல்லாஹ் சில மக்களை எவ்வாறு நேர்வழி செலுத்துவான்! அவர்களோ நம்பிக்கை கொண்டு, “நிச்சயமாக இந்த தூதர் உண்மையானவர்” என்று சாட்சி கூறினார்கள். இன்னும், அவர்களிடம் தெளிவான சான்றுகள் வந்தன. ஆனால், அவர்கள் அதற்குப் பின்னர் (மனமுரண்டாக) நிராகரித்தார்கள். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
3:87 இவர்கள், இவர்களுடைய கூலியாவது: நிச்சயமாக இவர்கள் மீது அல்லாஹ்; இன்னும், வானவர்கள்; இன்னும், மக்கள் ஆகிய அனைவருடைய சாபம் உண்டாகுவதுதான்.
3:88 அதில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை விட்டு தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், (தங்கள் குற்றத்திற்கு காரணம் கூறி தப்பிக்க) அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
3:89 எனினும், அதற்குப் பின்னர் (வருத்தப்பட்டு, பாவங்களில் இருந்து திருந்தி,) திரும்பி, மன்னிப்புக் கோரி (தங்களை) சீர்திருத்திக் கொண்டவர்களைத் தவிர. (அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
3:90 நிச்சயமாக எவர்கள் - அவர்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தார்களோ; பிறகு, நிராகரிப்பையே அதிகப்படுத்தினார்களோ - அவர்களுடைய மன்னிப்புக்கோருதல் அறவே அங்கீகரிக்கப்படாது. இன்னும், அவர்கள்தான் வழி கெட்டவர்கள்.
3:91 நிச்சயமாக எவர்கள் நிராகரித்து, இன்னும் அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இருந்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களில் ஒருவரிடமிருந்தும் (அவரது குற்றம் மன்னிக்கப்படுவதற்காக) பூமி நிறைய தங்கத்தை அவர் மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அறவே (அது) அங்கீகரிக்கப்படாது. அவர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. இன்னும், உதவியாளர்களில் ஒருவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்.