>

உமர் ஷரீஃப் — 600

100:6 நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.

100:7 இன்னும், நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான்.

100:8 நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.

100:9 புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

100:10 இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

100:11 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்.

101:1 (உள்ளங்களை) திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.

101:2 எது திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது?

101:3 (நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

101:4 அந்நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று இருப்பார்கள்.

101:5 இன்னும், (அந்நாளில்) மிகவும் மென்மையாக்கப்பட்ட (காற்றில்) பரப்பப்பட்ட கம்பளி ரோமத்தைப் போல் மலைகள் ஆகிவிடும்.

101:6 ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,

101:7 அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.

101:8 ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,

101:9 அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.

101:10 (நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

101:11 (அது) கடுமையான உஷ்ணமுடைய நெருப்பாகும்.

102:1 (செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது.

102:2 இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்.

102:3 அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.

102:4 பிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.

102:5 அவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).

102:6 நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

102:7 பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

102:8 பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.