>

உமர் ஷரீஃப் — 598

96:13 நீர் அறிவிப்பீராக! அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்,

96:14 நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

96:15 அவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்).

96:16 பொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).

96:17 ஆக, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

96:18 நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.

96:19 அவ்வாறல்ல! அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (வணக்க வழிபாடுகள் மூலம் அவன் பக்கம்) நெருங்குவீராக!

97:1 நிச்சயமாக நாம் இதை ‘கத்ர்’ இரவில் இறக்கினோம்.

97:2 (நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

97:3 ‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.

97:4 அதில் வானவர்களும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு (அந்த ஆண்டுக்குரிய அல்லாஹ்வின்) எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.

97:5 ஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).

98:1 வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.

98:2 (அந்தச் சான்று) பரிசுத்தமான ஏடுகளை ஓதுகின்ற அல்லாஹ்விடமிருந்து (அனுப்பப்பட்டுள்ள முஹம்மத் எனும்) தூதர் ஆவார்.

98:3 அவற்றில் (-அந்த வேத ஏடுகளில்) நேரான (சரியான, நீதியான) சட்டங்கள் உள்ளன.

98:4 வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களிடம் தெளிவான சான்று வந்த பின்னர் தவிர (நபியைப் பின்பற்றுவோம் என்ற தங்கள் கொள்கையிலிருந்து) பிரியவில்லை.

98:5 அவர்கள் வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர ஏவப்படவில்லை. இன்னும், இதுதான் நேரான (நீதியான, சரியான சட்டங்களுடைய) மார்க்கமாகும்.