>

உமர் ஷரீஃப் — 586

80:41 தூசி(கள் இருள்கள், இழிவுகள்) அவற்றை மூடிக்கொள்ளும்.

80:42 இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.

81:1 (உலக முடிவுக்காக) சூரியன் (ஒளி) மங்கவைக்கப்படும்போது,

81:2 இன்னும், நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்போது,

81:3 இன்னும், மலைகள் அகற்றப்படும்போது,

81:4 இன்னும், நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,

81:5 இன்னும், காட்டு மிருகங்கள் ஒன்று திரட்டப்ப(ட்டு அவை எல்லாம் மரணிக்க வைக்கப்ப)டும்போது,

81:6 இன்னும், கடல்கள் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஓடும்போது (இவ்வுலகம் முடிவுறும்).

81:7 இன்னும், ஆன்மாக்கள் (நல்லோர் நல்லோருடன் சொர்க்கத்திலும், பாவிகள் பாவிகளுடன் நரகத்திலும்) ஜோடி சேர்க்கப்படும்போது,

81:8 இன்னும், (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,

81:9 அவள் எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டாள்? என்று.

81:10 இன்னும், (செயல்கள் எழுதப்பட்ட) ஏடுகள் விரிக்கப்படும்போது,

81:11 இன்னும், வானம் கழட்டப்பட்டு, பிடுங்கப்பட்டு, பிறகு சுருட்டப்படும்போது,

81:12 இன்னும், நரகம் கடுமையாக எரிக்கப்படும் போது,

81:13 இன்னும், சொர்க்கம் சமீபமாக்கப்படும் போது,

81:14 ஒவ்வொரு ஆன்மாவும் (நல்லது அல்லது கெட்டதில்) தான் எதைக் கொண்டு வந்ததோ அதை அறிந்து கொள்ளும்.

81:15 ஆக, (பகலில்) மறைந்துவிடுபவை மீது சத்தியம் செய்கிறேன்!

81:16 விரைந்து வேகமாகச் செல்கின்றவை, பிறகு, சென்ற பாதையில் அப்படியே திரும்பிவருகின்றவை (மீது சத்தியமாக!)

81:17 இரவின் மீது சத்தியமாக! அது பின்னோக்கி செல்லும்போது,

81:18 பகலின் வெளிச்சத்தின் மீது சத்தியமாக! அது தெளிவாகி விடும்போது,

81:19 நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரீல்) உடைய கூற்றாகும் (-அவர் மூலம் இறக்கப்பட்ட இறை வேதமாகும்).

81:20 (அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர்.

81:21 அங்கு (வானவர்களின்) கீழ்ப்படிதலுக்கு உரியவர், (அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர். (அத்தகைய வானவத் தூதர் ஜிப்ரீல் வாயிலாக இறக்கப்பட்ட கூற்றாகும் இந்த குர்ஆன்.)

81:22 உங்கள் தோழர் (-நபி முஹம்மத்) பைத்தியக்காரராக இல்லை.

81:23 இன்னும், திட்டவட்டமாக தெளிவான அடிவானத்தில் அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) கண்டார்.

81:24 மறைவானவற்றில் (-அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக, மறைப்பவராக) இல்லை.

81:25 இன்னும், அது (-அந்த குர்ஆன், அல்லாஹ்வின் கருணையிலிருந்து) தூக்கி எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.

81:26 ஆக, (இதனை விட்டு) நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?

81:27 இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர!

81:28 உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்).

81:29 அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்.