உமர் ஷரீஃப் — 582
78:1 எதைப் பற்றி அவர்கள் (தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?
78:2 மகத்தான செய்தியைப் பற்றியா?
78:3 அதில் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்கிறார்கள். (அவர்களில் ஒருவர் மறுமை உண்டு என்றும்; இன்னொருவர் மறுமை இல்லை என்றும் கூறுகிறார்.)
78:4 அவ்வாறல்ல! (அவர்கள் அதை) விரைவில் அறிவார்கள்.
78:5 பிறகு(ம் கூறுகிறேன்), அவ்வாறல்ல. (உண்மையை) விரைவில் அறிவார்கள்.
78:6 பூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?
78:7 இன்னும், மலைகளை - (பூமி ஆடாமல் இருக்க அதை ஸ்திரப்படுத்தும்) முளைக்கோல்களாக நாம் ஆக்கவில்லையா?
78:8 இன்னும், உங்களை ஜோடிகளாகப் படைத்தோம். (எல்லாவற்றிலும் ஆண், பெண், நல்லது, கெட்டது, வானம், பூமி, நீர், நெருப்பு என இரு வகைகளை படைத்தோம்.)
78:9 இன்னும், உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
78:10 இன்னும், இரவை (உங்களை மூடிக்கொள்கிற) ஆடையாக ஆக்கினோம்.
78:11 இன்னும், பகலை வாழ்வா(தாரத்தை தேடுவதற்கான நேரமா)க ஆக்கினோம்.
78:12 இன்னும், உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம்.
78:13 இன்னும், பிரகாசிக்கக்கூடிய விளக்கை (முதல் வானத்தில்) ஆக்கினோம்.
78:14 இன்னும், கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்.
78:15 அதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்).
78:16 இன்னும், (பழங்கள் நிறைந்த, கிளைகள்) அடர்த்தியான தோட்டங்களையும் (நாம் உற்பத்தி செய்வதற்காக மழையை இறக்கினோம்).
78:17 நிச்சயமாக தீர்ப்பு நாள் குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது.
78:18 எக்காளத்தில் ஊதப்படுகிற நாளில் (அது நிகழும்). ஆக, (அந்த நாளில் நீங்கள் பல) கூட்டங்களாக வருவீர்கள்.
78:19 இன்னும், வானம் திறக்கப்படும். ஆக, அது, (பல) வழிகளுடையதாக மாறிவிடும்.
78:20 இன்னும், மலைகள் அகற்றப்பட்டுவிடும். ஆக, (பார்ப்பவர்களுக்கு) அது கானல் நீராக மாறிவிடும்.
78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
78:22 எல்லை மீறிகளுக்கு (-பெரும் பாவிகளுக்கு) தங்குமிடமாக இருக்கும்.
78:23 அதில் (அவர்கள்) நீண்ட காலங்கள் தங்கக் கூடியவர்களாக (இருப்பார்கள்).
78:24 (உடல்கள் மீது நரக நெருப்பின் சூட்டை தனிக்கிற) குளிர்ச்சியையோ (குடிப்பதற்கும் தாகம் தீர்ப்பதற்கும் நல்ல) ஒரு பானத்தையோ அதில் அவர்கள் சுவைக்க மாட்டார்கள்,
78:25 கொதி நீரையும், சீழ் சலத்தையும் தவிர. (இவைதான் அவர்களின் குடிபானங்களாக இருக்கும்.)
78:26 (அவர்களின் செயல்களுக்குத்) தகுந்த கூலியாக (கூலி கொடுக்கப்படுவார்கள்.)
78:27 நிச்சயமாக அவர்கள் (மறுமையில் தங்களது செயல்கள்) விசாரிக்கப்படுவதை பயப்படாதவர்களாக இருந்தார்கள்.
78:28 இன்னும், நம் வசனங்களை பிடிவாதமாக பொய்ப்பித்தார்கள்.
78:29 (அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம்.
78:30 ஆகவே, (இன்றைய தினம் நரக தண்டனையை) சுவையுங்கள்! ஆக, உங்களுக்கு அதிகப்படுத்தவே மாட்டோம், தண்டனையைத் தவிர!