>

உமர் ஷரீஃப் — 581

77:20 பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?

77:21 ஆக, உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,

77:22 குறிப்பிட்ட ஒரு தவணை வரை.

77:23 ஆக, நாம் திட்டமிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.

77:24 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:25 பூமியை (அது தனக்குள்) ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா,

77:26 (அது தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா)?

77:27 இன்னும், அதில் மிக உயரமான (பெரிய) மலைகளை நாம் ஆக்கினோம். இன்னும், உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.

77:28 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:29 நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!

77:30 மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!

77:31 அது நிழல்தரக்கூடியது அல்ல. இன்னும், அது (நெருப்பின்) ஜுவாலையிலிருந்து தடுக்காது.

77:32 நிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!

77:33 அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!

77:34 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:35 இது அவர்கள் பேசாத நாளாகும்.

77:36 இன்னும், அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் சாக்குபோக்குகள் கூறுவதற்கு.

77:37 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:38 இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் (உங்கள்) முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.

77:39 ஆக, உங்களிடம் (எனக்கு எதிராக தீங்கு செய்வதற்கு; அல்லது, நீங்கள் எனது தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு (அந்த) சூழ்ச்சி(யை) செய்யுங்கள்.

77:40 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:41 நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் (அடர்த்தியான மரங்களின்) நிழல்களிலும் ஊற்றுகளிலும்,

77:42 அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள். (-அவற்றை முழுமையாக அனுபவிப்பார்கள்.)

77:43 நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (-உங்கள் நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக (இவற்றை) உண்ணுங்கள்! பருகுங்கள்!

77:44 நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.

77:45 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:46 (இவ்வுலகில்) சிறிது காலம் உண்ணுங்கள்! சுகம் அனுபவியுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள் ஆவீர்கள்!

77:47 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:48 தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.

77:49 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:50 ஆக, (இந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) இதற்கு பின்னர் வேறு எந்த (வேத) செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?