உமர் ஷரீஃப் — 575
73:20 நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.” அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
74:1 போர்வை போர்த்தியவரே!
74:2 எழுவீராக! எச்சரிப்பீராக!
74:3 உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!
74:4 இன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக!
74:5 சிலைகளை விட்டும் (அவற்றை வழிபடுவதை விட்டும்) விலகுவீராக!
74:6 (உமது அமல்களை) நீர் பெரிதாக கருதியவராக, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!
74:7 இன்னும், உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!
74:8 ஆக, எக்காளத்தில் ஊதப்பட்டால்,
74:9 அதுதான் அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.
74:10 அது, நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.
74:11 என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றிலிருந்து வெளியேறும்போது) படைத்தேனோ அவனையும் விட்டுவிடுவீராக!
74:12 இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
74:13 இன்னும், (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).
74:14 இன்னும், அவனுக்கு அதிகமான வசதிகளை செய்து கொடுத்தேன்.
74:15 பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
74:16 அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக, நிராகரிப்பதில் பிடிவாதம் பிடித்தவனாக) இருந்தான்.
74:17 விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.
74:18 நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும், திட்டமிட்டான்.