உமர் ஷரீஃப் — 568
69:36 இன்னும், (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர.
69:37 அதை சாப்பிட மாட்டார்கள், பாவிகளைத் தவிர!
69:38 (இறை வேதத்தை பொய்ப்பிக்கின்ற பாவிகளே!) நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதன் மீது நான் சத்தியம் செய்கிறேன்!
69:39 இன்னும், நீங்கள் எதை பார்க்க மாட்டீர்களோ அதன் மீதும் (சத்தியம் செய்கிறேன்)!
69:40 நிச்சயமாக (இறைவனின் வேதமான) இது (முஹம்மது ஆகிய நமது) கண்ணியமான தூதர் மூலமாக ஓதப்படுகிற வசனங்களாகும்.
69:41 இது, கவிஞரின் பேச்சல்ல. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
69:42 இன்னும், இது ஜோசியக்காரனின் பேச்சுமல்ல. மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
69:43 இது, அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதம் ஆகும்.
69:44 அவர் நம்மீது (நாம் சொல்லாத) சில பேச்சுகளை இட்டுக்கட்டி பேசினால்,
69:45 நாம் அவரை பலமாக பிடித்திருப்போம்.
69:46 பிறகு, அவரின் நாடி நரம்பை நாம் வெட்டி இருப்போம்.
69:47 ஆக, உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.
69:48 நிச்சயமாக இது இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் அறிவுரையாகும்.
69:49 நிச்சயமாக உங்களில் (இந்த வேதத்தை) பொய்ப்பிப்பவர்கள் உள்ளனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
69:50 நிச்சயமாக இது நிராகரிப்பாளர்களுக்கு மிகத் துக்கமானதாகும்.
69:51 நிச்சயமாக இது மிக உறுதியான உண்மையாகும்.
69:52 ஆக, மிக மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!
70:1 (நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய தண்டனையை (அது உடனே இறங்கட்டும் என்று) கேட்பவர் கேட்டார்.
70:2 நிராகரிப்பாளர்களுக்கு (அந்த தண்டனை நிகழும்). அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.
70:3 உயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும்).
70:4 வானவர்களும் ஜிப்ரீலும் அவன் பக்கம் ஒரு நாளில் ஏறுகிறார்கள். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.
70:5 ஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!
70:6 நிச்சயமாக இவர்கள் அதை தூரமாக பார்க்கிறார்கள்.
70:7 நாம் அதை சமீபமாக பார்க்கிறோம்.
70:8 வானம் எண்ணெயின் அடி மண்டியைப் போல் ஆகிவிடுகிற நாளில்,
70:9 இன்னும், மலைகள் முடிகளைப் போல் ஆகிவிடுகிற நாளில் (அந்த தண்டனை நிகழும்.)
70:10 ஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.