>

உமர் ஷரீஃப் — 567

69:9 ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னுள்ளவர்களும், தலைகீழாக புரட்டப்பட்ட ஊரார்களும் தீய செயல்களை செய்தனர்.

69:10 ஆக, அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். ஆகவே, கடுமையான பிடியால் (-தண்டனையால்) அவன் அவர்களைப் பிடித்தான் (-தண்டித்தான்).

69:11 தண்ணீர் மிக அதிகமானபோது நிச்சயமாக நாம் உங்க(ள் முன்னோர்களான நூஹுடன் நம்பிக்கை கொண்டவர்க)ளை கப்பலில் ஏற்றினோம்.

69:12 (நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட) அ(ந்த சம்பவத்)தை உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகிற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்).

69:13 ஆக, எக்காளத்தில் ஒரு முறை ஊதப்பட்டால்,

69:14 பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால்,

69:15 ஆக, அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை நாளான)து நிகழும்.

69:16 இன்னும், வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். ஆக, அந்நாளில் அது பலவீனமடைந்திருக்கும்.

69:17 இன்னும், வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் அவர்களுக்கு மேல் சுமப்பார்கள்.

69:18 அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) சமர்ப்பிக்கப்படுவீர்கள். உங்களி(ல் ரகசியங்களி)ல் இருந்து மறையக்கூடியது எதுவும் (இறைவனுக்கு முன்னால்) மறைந்துவிடாது.

69:19 ஆக, யார் தனது செயலேடு தனது வலது கரத்தில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “வாருங்கள்! (இதோ) எனது செயலேட்டை (எடுத்து)ப் படியுங்கள்!”

69:20 “நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.”

69:21 ஆக, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில்,

69:22 உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார்.

69:23 அதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும்.

69:24 நீங்கள் (உலகத்தில் வாழ்ந்த அந்த) முடிந்துபோன நாள்களில் (உங்கள் மறுமை வாழ்க்கைக்காக) முற்படுத்திய (நல்ல) செயல்களின் காரணமாக (இந்த சொர்க்கத்தில்) இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!

69:25 ஆக, யார் தனது செயலேடு தனது இடது கையில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “எனது செயலேடு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!”

69:26 “எனது கூலி என்னவாக இருக்கும் என்று நான் அறியமாட்டேன்.”

69:27 “(உலகத்தில் எனக்கு நிகழ்ந்த எனது மரணம்,) அதுவே (எனது காரியத்தை) முடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டுமே! (இந்த மறுமைக்கு நான் வராமல் இருந்திருக்க வேண்டுமே!)”

69:28 “எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!”

69:29 “எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுக்க நான் கூறிய எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டதே.”

69:30 (அல்லாஹ், வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! இன்னும், அவனை விலங்கிடுங்கள்!”

69:31 “பிறகு, நரகத்தில் அவனை எரித்துப் பொசுக்குங்கள்!”

69:32 “பிறகு, ஒரு சங்கிலியில், - அதன் முழம் எழுபது முழங்களாகும் - அவனைப் புகுத்துங்கள்!” (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.)

69:33 நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான்.

69:34 இன்னும், ஏழைகளின் உணவிற்கு (-வாழ்வாதாரத்திற்கு பிறரை) தூண்டாதவனாக இருந்தான்.

69:35 ஆகவே, இன்று அவனுக்கு இங்கு (உதவி செய்கிற) நெருக்கமான நண்பர் (யாரும்) இருக்க மாட்டார்.