>

உமர் ஷரீஃப் — 565

68:17 நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம், தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல். “அதிகாலை பொழுதை அவர்கள் அடையும்போது நிச்சயமாக அவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!

68:18 “அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை.

68:19 ஆக, அவர்கள் தூங்கியவர்களாக இருந்தபோது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை(யின் படி நெருப்பு) இரவில் அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) சுற்றியது (-சூழ்ந்து கொண்டது).

68:20 அ(ந்த தோட்டமான)து கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.

68:21 ஆக, அவர்கள் அதிகாலைபொழுதை அடைந்தபோது ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

68:22 அதாவது, நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள், நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால் (என்று அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டனர்).

68:23 ஆக, அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக புறப்பட்டு சென்றனர்,

68:24 அதாவது, இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அ(ந்த தோட்டத்)தில் நுழைந்து விடக்கூடாது என்று.

68:25 அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்.

68:26 ஆக, அவர்கள் அ(ந்த தோட்டத்)தைப் பார்த்தபோது, “நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்” என்று கூறினார்கள்.

68:27 “இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம்” (என்றும் கூறினார்கள்).

68:28 அவர்களில் நீதவான் கூறினார்: (நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று கூற வேண்டும் என்று) நான் கூறவில்லையா? (அதன்படி) நீங்கள் இன் ஷா அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டாமா!

68:29 அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”

68:30 ஆக, அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர்.

68:31 அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் எல்லை மீறியவர்களாக (அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி கெட்டவர்களாக) இருந்தோம்.”

68:32 “எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த (தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் நம்பிக்கையும்) உள்ளவர்கள்.”

68:33 இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். இன்னும், மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியதாகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே!

68:34 நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன.

68:35 ஆக, (நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்க(ளாகிய முஸ்லிம்க)ளை, (நமது கட்டளையை மீறுகின்ற நிராகரிப்பாளர்களாகிய) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

68:36 உங்களுக்கு என்ன ஆனது, எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?

68:37 (நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கிறதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கிறீர்களா?

68:38 (அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”

68:39 நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை நீடித்து இருக்கின்ற உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?)

68:40 (நபியே!) அவர்களிடம் கேட்பீராக! “அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?”

68:41 (இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? ஆக, அவர்கள் (தங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களின் (அந்த) கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) கொண்டு வரட்டும்.

68:42 கெண்டைக்கால் காண்பிக்கப்படுகிற நாளில் (தங்கள் கூட்டாளிகளை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிவதற்கு அழைக்கப்படுவார்கள். ஆக, அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.