உமர் ஷரீஃப் — 534
55:70 அவற்றில் (குணத்தால்) மிக சிறப்பானவர்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.
55:71 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
55:72 (அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)
55:73 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
55:74 இவர்களுக்கு முன்னர் மனிதனோ ஜின்னோ அவர்களைத் தொட்டிருக்க மாட்டார்கள்.
55:75 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
55:76 (சொர்க்கவாசிகள்) பச்சை நிற (உறைகள் உடைய) தலையணைகள் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:77 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?
55:78 கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் (கொடைகளுக்கும் அருள்களுக்கும்) உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிகுந்த பாக்கியமானதும், மிகவும் உயர்ந்ததும், மிக்க மகத்துவமானதும் ஆகும்.
56:1 நிகழக்கூடிய சம்பவம் (-மறுமை) நிகழ்ந்தால்,
56:2 அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.
56:3 (அது, பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியதும், (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியதும் ஆகும்.
56:4 பூமி பலமாக குலுக்கப்பட்டால்,
56:5 இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,
56:6 பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் (அல்லது காற்றில் பறக்கும் காய்ந்த சருகுகளைப் போல்) அவை ஆகிவிடும்.
56:7 இன்னும், நீங்கள் மூன்று வகையினர்களாக ஆகிவிடுவீர்கள்.
56:8 ஆக, அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?
56:9 இன்னும், துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
56:10 இன்னும், (உலக வாழ்க்கையில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.
56:11 அவர்கள்தான் (அல்லாஹ்விற்கு) மிக சமீபமானவர்கள்.
56:12 “(அவர்கள்) நயீம்” எனும் இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.
56:13 முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்).
56:14 இன்னும், பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).
56:15 ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்).
56:16 அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.