>

உமர் ஷரீஃப் — 532

55:19 (வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.

55:20 அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் (அல்லாஹ் நிர்ணயித்த) எல்லையை மீறாது.

55:21 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?

55:22 அவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.

55:23 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:24 மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட பிரமாண்டமான கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் செய்தான்.)

55:25 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?

55:26 அதன் மீது இருக்கிற எல்லோரும் அழிந்துவிடுவார்கள்.

55:27 பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் (கொடைகளுக்கும் அருள்களுக்கும்) உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்.

55:28 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:29 வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கிறான்.

55:30 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:31 மனித, ஜின் வர்க்கத்தினரே (உங்களிடம் விசாரணை செய்வதற்காக) உங்களை கவனிப்போம்.

55:32 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:33 ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் ஓரங்களில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.

55:34 ஆக, (ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:35 நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். ஆக, நீங்கள் (அவனை) பழிவாங்க முடியாது. (நீங்கள் உங்களை பாதுகாக்கவும் முடியாது.)

55:36 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:37 ஆக, வானம் பிளந்து விட்டால், அது காய்ந்த எண்ணெயைப் போல் செந்நிறத்தில் ஆகிவிடும்.

55:38 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:39 ஆக, அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (விசாரித்த பின்னர்தான் நல்லவர் யார், தீயவர் யார் என்பதை அறிய முடியும் என்ற அவசியம் இருக்காது.)

55:40 ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?

55:41 குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். ஆக, உச்சிமுடிகளையும் கால் பாதங்களையும் (இறுக்கமாக) பிடிக்கப்ப(ட்டு நரகத்தில் வீசி எறியப்ப)டும்.