உமர் ஷரீஃப் — 523
51:52 இவ்வாறுதான், இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் என்று கூறியே தவிர.
51:53 (முற்கால நிராகரிப்பாளர்கள், இக்கால நிராகரிப்பாளர்கள்) இவர்கள் (எல்லோரும்) தங்களுக்குள் இ(றைத்தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்ற விஷயத்)தை உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று.) மாறாக, இவர்கள் எல்லை மீறிய மக்கள் ஆவார்கள்.
51:54 ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! ஆக, நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.
51:55 இன்னும், (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.
51:56 ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை.
51:57 நான் அவர்களிடம் (அவர்கள் எனது படைப்புகளுக்கு) வாழ்வாதாரம் எதையும் (கொடுக்க வேண்டுமென்று) நாடவில்லை. இன்னும், அவர்கள் என(து படைப்புகளு)க்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
51:58 நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளிப்பவன் (-எல்லோருக்கும் வாழ்வாதாரத்தையும் எல்லா தேவைகளையும் வழங்குபவன்), வலிமை உடையவன், மிக உறுதியானவன்.
51:59 ஆக, நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போன்று. ஆகவே, அவர்கள் (தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்.
51:60 ஆக, நிராகரித்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனை எந்த நாளில் இறங்கும் என்று) – அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களோ – அந்த அவர்களுடைய நாளில் கேடுதான்.
52:1 தூர் மலை மீது சத்தியமாக!
52:2 எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!
52:3 (அது) விரிக்கப்பட்ட ஏடுகளில் (எழுதப்பட்டுள்ளது).
52:4 (ஏழாவது வானத்தில் உள்ள) அல்பைத்துல் மஃமூர் என்னும் செழிப்பான (இறை) ஆலயத்தின் மீது சத்தியமாக!
52:5 உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6 நீரால் நிரம்பிய கடல் மீது சத்தியமாக!
52:7 நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும்.
52:8 அதை தடுப்பவர் எவரும் இல்லை.
52:9 வானம் குலுங்குகின்ற நாளில் (அந்த தண்டனை நிகழும்).
52:10 இன்னும், (அந்நாளில்) மலைகள் (அவற்றின் இடங்களை விட்டுப் பெயர்ந்து காற்றில்) செல்லும்.
52:11 ஆகவே, (தூதரை) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்.
52:12 அவர்கள் குழப்பத்தில் இருந்துகொண்டு (வீண்) விளையா(ட்)டு(களில் வாழ்க்கையை கழிக்)கிறார்கள்.
52:13 அவர்கள் நரக நெருப்பின் பக்கம் (பலமாக) தள்ளப்படுகின்ற நாளில் (அவர்களுக்கு நாசம்தான்!).
52:14 இதுதான் நரகம், இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.