உமர் ஷரீஃப் — 51
3:10 நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையிலிருந்து) எதையும் அவர்களை விட்டு அறவே தடுக்காது. இன்னும், அவர்கள்தான் நரகத்தின் எரிபொருள்கள் ஆவார்கள்.
3:11 (இவர்களின் தன்மை) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார் இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் தன்மையைப் போன்றுதான். அவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
3:12 (நபியே!) நிராகரிப்பாளர்களுக்கு கூறுவீராக: “(நீங்கள்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். இன்னும், (நீங்கள் இறந்த பின்னர் மறுமையில்) ஜஹன்னம் (-நரகத்தின்) பக்கம் ஒன்று திரட்டப்படுவீர்கள். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டது.’’
3:13 (பத்ர் போரில்) சந்தித்த இரு கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் (நம்பிக்கைக் கொண்டு) அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறது, மற்றொரு கூட்டம் (அல்லாஹ்வை) நிராகரிக்கக்கூடியது. (அதிக எண்ணிக்கையில் இருந்த) இவர்களை அ(ல்லாஹ்வின் பாதையில் போர் புரிப)வர்கள் தங்களைப் போன்று இரு மடங்குகளாக (மட்டும்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தனது உதவியால் பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை திட்டமாக இருக்கிறது.
3:14 பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர் ரக அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய ஆசைகளின் விருப்பம் மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்க்கையின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ் - அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.
3:15 (நபியே!) கூறுவீராக: “இவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு தங்கள் இறைவனிடம் சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும் பரிசுத்தமான மனைவிகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் (அவர்களுக்கு) உண்டு. இன்னும் அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.’’