>

உமர் ஷரீஃப் — 481

41:39 இன்னும், நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கிறீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைந்து நன்கு வளர்கிறது. இது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

41:40 நிச்சயமாக நமது வசனங்களில் (குழப்பம் செய்து சத்தியத்தை விட்டு) தடம் புரளுகிறவர்கள் நம்மிடம் மறைந்துவிட மாட்டார்கள். ஆக, யார் நரகத்தில் போடப்படுபவரோ அவர் சிறந்தவரா? அல்லது, மறுமை நாளில் பாதுகாப்பு பெற்றவராக வருகிறவரா? நீங்கள் நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறவன் ஆவான்.

41:41 நிச்சயமாக எவர்கள் இந்த வேதத்தை - அது அவர்களிடம் வந்தபோது - நிராகரித்தார்களோ (அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே.) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.

41:42 அதற்கு முன்னிருந்தும் அதற்குப் பின்னிருந்தும் பொய்யர்கள் அதனிடம் வரமாட்டார்கள். (பொய்யர்கள் யாராலும் அதில் இல்லாததை அதில் சேர்க்கவும் முடியாது, அதில் உள்ளதை அதில் இருந்து எடுக்கவும் முடியாது.) மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது).

41:43 உமக்கு முன்னர் (அனுப்பப்பட்ட) தூதர்களுக்கு திட்டமாக எது சொல்லப்பட்டதோ அதைத் தவிர (வேறு ஏதும்) உமக்கு சொல்லப்படாது. நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்புடையவன், வலி தருகின்ற தண்டனை கொடுப்பவன் ஆவான்.

41:44 அரபி அல்லாத மொழியில் உள்ள குர்ஆனாக இதை நாம் ஆக்கி இருந்தால், “இதன் வசனங்கள் (அரபி மொழியில்) விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? (இந்த குர்ஆன்) அரபி அல்லாத ஒரு மொழியா! (இது இறக்கப்பட்டவரின் மொழியோ) அரபி ஆயிற்றே” என்று கூறியிருப்பார்கள். (நபியே!) கூறுவீராக! “இது (-இந்த குர்ஆன் அதை) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்கள் எந்த மொழி உடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு) நேர்வழியும் நிவாரணமும் ஆகும்.” இன்னும், எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களின் காதுகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. (அவர்கள் படிப்பினை பெறும் நோக்கத்துடன் இதை செவியுற மாட்டார்கள்.) அது அவர்கள் (உடைய உள்ளங்கள்) மீது மறைந்திருக்கிறது. (ஆகவே, அவர்களுடைய உள்ளங்களால் அதை புரிய முடியாது. இந்த வேதத்தை நிராகரிக்கும்) அவர்கள் மிக தூரமான இடத்தில் இருந்து அழைக்கப்படுகிறார்கள் (போலும். ஆகவேதான் இந்த வேதத்தின் சத்தியத்தை அவர்களால் புரிய முடியவில்லை போலும்).

41:45 திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம். ஆக, அதில் முரண்பாடு செய்யப்பட்டது. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இன்னும், நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள்.

41:46 யார் நல்லதை செய்வாரோ அது அவருக்குத்தான் நன்மையாகும். இன்னும், யார் கெட்டதை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். உமது இறைவன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்பவனாக இல்லை.