>

உமர் ஷரீஃப் — 480

41:30 நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”

41:31 “நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.”

41:32 “(இவை எல்லாம்) மகா மன்னிப்பாளன், மகா கருணையாளனிடமிருந்து விருந்தோம்பலாக (உங்களுக்கு வழங்கப்படும்).”

41:33 யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்?

41:34 நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! அப்போது உமக்கும் எவர் ஒருவருக்கும் இடையில் பகைமை இருக்கிறதோ அவர் ஓர் நெருக்கமான உறவுக்காரரைப்போல் ஆகிவிடுவார்.

41:35 இ(ந்த குணத்)தை பொறுமையாளர்கள் தவிர கொடுக்கப்பட மாட்டார்கள். இன்னும், பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர இ(ந்த குணத்)தை கொடுக்கப்பட மாட்டார்கள்.

41:36 நிச்சயமாக ஷைத்தானிடமிருந்து ஏதாவது தீய எண்ணம் (உமது எதிரியை பழிவாங்கும்படி) உம்மைத் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.

41:37 இரவு, பகல், சூரியன், சந்திரன் அனைத்தும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அ(ந்த உண்மையான இறை)வனை வணங்குபவர்களாக இருந்தால்.

41:38 ஆக, அவர்கள் பெருமையடித்து விலகினால் (நீர் கவலைப்படாதீர்), உமது இறைவனிடம் இருக்கின்ற(வான)வர்கள் அவனை இரவிலும் பகலிலும் துதிக்கிறார்கள். இன்னும், அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.