>

உமர் ஷரீஃப் — 476

40:78 திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். இன்னும், அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டுவருவது எந்த ஒரு தூதருக்கும் சாத்தியமானது அல்ல. ஆக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அப்போது பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.

40:79 அல்லாஹ்தான் உங்களுக்காக கால்நடைகளை, - அவற்றில் (சிலவற்றின் மீது) நீங்கள் வாகனிப்பதற்காக - படைத்தான். இன்னும், அவற்றில் (சிலவற்றின் மாமிசங்களை) நீங்கள் புசிக்கிறீர்கள்.

40:80 இன்னும், உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும், உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும், அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள். (-நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)

40:81 இன்னும், அவன் உங்களுக்கு தனது அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான். ஆக, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?.

40:82 ஆக, இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட அதிகமாகவும், வலிமையால் மிக பலசாலிகளாகவும், பூமியில் அடையாளங்களால் (தொழிற்சாலைகள் இன்னும் மாட மாளிகைகளால்) அதிகமாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் செய்து கொண்டிருந்தது (-அவர்களின் பலமான கோட்டைகள்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.

40:83 ஆக, அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் தங்களிடம் இருந்த கல்வித் திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ல்லாஹ்வின் தண்டனையான)து அவர்களை சூழ்ந்துவிட்டது.

40:84 ஆக, அவர்கள் நமது தண்டனை (இறங்கிய சமயத்தில் நமது வலிமை)யைப் பார்த்தபோது “நாங்கள் அல்லாஹ்வை - அவன் ஒருவனை மட்டும் - நம்பிக்கை கொண்டோம்; இன்னும், நாங்கள் எதை (அல்லாஹ்விற்கு) இணைவைப்பவர்களாக இருந்தோமோ அதை நிராகரித்து விட்டோம்” என்று கூறினார்கள்.

40:85 ஆக, அவர்கள் நமது தண்டனையைப் பார்த்தபோது அவர்கள் நம்பிக்கை கொண்டது அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நடைமுறை எது (முன்னர்) சென்றதோ அதே நடைமுறைதான் (இவர்களுடனும் பின்பற்றப்படும்). அப்போது நிராகரிப்பாளர்கள் நிச்சயம் நஷ்டமடைவார்கள்.