>

உமர் ஷரீஃப் — 474

40:59 நிச்சயமாக மறுமை வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் மனிதர்களில் அதிகமானவர்கள் (அதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

40:60 இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.”

40:61 அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை - அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்; - இன்னும், பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன் ஆவான். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.

40:62 (இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை வணங்குவதிலிருந்து) திருப்பப்படுகிறீர்கள்.

40:63 இவ்வாறுதான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் (அல்லாஹ்வை வணங்குவதை விட்டு) திருப்பப்படுகிறார்கள்.

40:64 அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். இன்னும், அவன்தான் உங்களை உருவமைத்தான். ஆக, (மனிதர்களாகிய) உங்கள் உருவங்களை (ஏனைய படைப்புகளை பார்க்கிலும்) அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். (இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் (நீங்கள் வணங்கவேண்டிய) உங்கள் இறைவன் ஆவான். ஆக, அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.

40:65 அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். (வணங்கத்தகுதியான) இறைவன் அவனைத் தவிர அறவே இல்லை. ஆகவே, மார்க்கத்தை (-வழிபாடுகளை) அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியது.

40:66 (நபியே) நீர் கூறுவீராக! “என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்துவிட்டபோது, அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவர்களை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டு விட்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனுக்கு நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் என்று நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்.”