>

உமர் ஷரீஃப் — 468

40:8 எங்கள் இறைவா! இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக! அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கிறாய். இன்னும், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்கள் அனைவரையும் (சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக)! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.

40:9 இன்னும், அவர்களை தீமைகளிலிருந்து (தண்டனைகளிலிருந்து) பாதுகாப்பாயாக! அன்றைய தினம் எவரை நீ தண்டனைகளிலிருந்து பாதுகாப்பாயோ திட்டமாக அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய். அதுதான் மகத்தான நற்பாக்கியமாகும்.

40:10 நிச்சயமாக நிராகரிப்பவர்கள் (நரகத்தில்) சப்தமிட்டு அழைக்கப்படுவார்கள்: “நீங்கள் உங்களை கோபிப்பதை விட அல்லாஹ் (உங்களை) கோபிப்பது மிகப் பெரியதாகும். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அழைக்கப்பட்டபோது (அதை) நிராகரித்தீர்கள்.”

40:11 அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இருமுறை மரணத்தைக் கொடுத்தாய். இன்னும், இருமுறை எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய். ஆக, நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டோம். ஆகவே, (நரகத்தில் இருந்து) வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?”

40:12 இது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவன் மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணைவைத்து வணங்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். ஆக, எல்லா அதிகாரமும் (ஆட்சியும்) மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனல்லாதவர்களை எப்படி வணங்க முடியும்.)

40:13 அவன்தான் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கிறான். இன்னும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை (-வாழ்வாதாரத்தின் மூலதனமாகிய மழையை) இறக்குகிறான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவர்களைத் தவிர (இதன் மூலம்) நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

40:14 ஆகவே, அல்லாஹ்வை - அவனுக்கு மார்க்கத்தை (-வழிபாடுகளை) பரிசுத்தமாக்கியவர்களாக - அழையுங்கள்! (இணைவைக்கின்ற) நிராகரிப்பாளர்கள் (அதை) வெறுத்தாலும் சரியே!

40:15 அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக் கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளைகளை உள்ளடக்கிய வஹ்யை இறக்குவான் (உலகத்தார் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (மக்களை) அவர் எச்சரிப்பதற்காக.

40:16 அந்நாளில் அவர்கள் (கப்ருகளில் இருந்து) வெளிப்பட்டு நிற்பார்கள். அவர்களில் எதுவும் அல்லாஹ்வின் முன்னால் மறைந்துவிடாது. “இன்று ஆட்சி யாருக்கு உரியது?” (என்று அவன் கேட்பான். பதில் அளிப்பவர் யாரும் இருக்க மாட்டார். அவனே பதில் அளிப்பான்:) “(நிகரற்ற) ஒருவனாகிய, (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனாகிய அல்லாஹ்விற்கே உரியது ஆட்சி அனைத்தும்.”