>

உமர் ஷரீஃப் — 448

37:52 “நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் உள்ளவனா?” என்று (உலகில் வாழும்போது என்னிடம்) கூறுவான்.

37:53 “நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படு(வதற்காக எழுப்பப்படு)வோமா?” (என்றும் அவன் கூறுவான்)

37:54 (அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: “(நரகத்தில் உள்ளவர்களை) நீங்கள் எட்டிப்பார்க்க முடியுமா?” என்று கூறுவார்.

37:55 ஆக, (அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.

37:56 (அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை (வழிகேட்டில் தள்ளி) நாசமாக்கி இருப்பாய்.”

37:57 “என் இறைவனின் (நேர்வழி எனும்) அருட்கொடை (என்னுடன்) இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) கொண்டுவரப்பட்டவர்களில் ஆகி இருப்பேன்.”

37:58 “ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!”

37:59 “எங்கள் முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் எங்களுக்கு இல்லை). இன்னும் நாங்கள் தண்டனை செய்யப்படுபவர்களாக இல்லை.”

37:60 நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.

37:61 (உலக வாழ்க்கையில்) அமல் செய்பவர்கள் இது போன்ற (சொர்க்க பாக்கியத்தை மறுமையில் அடைவ)தற்காக அமல் செய்யட்டும்.

37:62 அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா? அல்லது, ஸக்கூம் என்ற கள்ளி மரமா?

37:63 நிச்சயமாக நாம் அதை இணைவைப்பவர்களுக்கு ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கி இருக்கிறோம்.

37:64 நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.

37:65 அதன் கனிகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.

37:66 ஆக, நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும், அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.

37:67 பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீர் கலக்கப்பட்ட (அருவருக்கத்தக்க) பானமும் உண்டு.

37:68 பிறகு, நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.

37:69 நிச்சயமாக இ(ந்த இணைவைப்ப)வர்கள் தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.

37:70 ஆக, அவர்களின் அடிச்சுவடுகளில் (கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகிறார்கள்.

37:71 இவர்களுக்கு முன் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழி கெட்டுள்ளனர்.

37:72 திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்க(ளாகிய நமது தூதர்)ளை நாம் அனுப்பினோம்.

37:73 ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!

37:74 எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (தண்டனையில் இருந்து) பாதுகாக்கப்படுவார்கள்.

37:75 திட்டவட்டமாக (நபி) நூஹ் நம்மை அழைத்தார். ஆக, பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.

37:76 இன்னும், மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.